இலங்கைக்கான விமான சேவைகளை குறைத்துக்கொண்ட நிறுவனங்கள்
எரிபொருளை நிரப்பும் வசதிகள் இல்லாமை மற்றும் வருமானம் ஈட்டும் பிரச்சினை போன்ற இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக ஐந்து வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்கள் இலங்கைக்கான பயணங்களை குறைத்துள்ளன.
108 பயணங்களை 52 ஆக குறைத்த நிறுவனங்கள்
108 தடவைகள் இலங்கைக்கு வந்து செல்லும் பயணங்களை இந்த விமான சேவை நிறுவனங்கள் 52 ஆக குறைத்துள்ளன. மேலும் இரண்டு விமான நிறுவனங்கள் இலங்கைக்கான சேவைகளை முற்றாக நிறுத்தியுள்ளன.
எமிரேட்ஸ், கத்தார் எயார்வேஸ், எடிஹெட், ஓமான் மற்றும் எயார் இந்தியா ஆகிய விமான சேவை நிறுவனங்கள் தமது பயணங்களை குறைத்துக்கொண்டுள்ளன. சவுதி எயார் மற்றும் குவைத் எயார்வேஸ் நிறுவனங்கள் இலங்கைக்கான சேவைகளை நிறுத்தியுள்ளன.
பயணங்களை குறைத்துக்கொண்ட மேலும் சில நிறுவனங்கள்
மேலும் மாலைதீவியன், கொரியன், சலாம் எயார்வேஸ், தாய் ஸ்மையில், சைனா சதர்ன், சுவிஸ் இண்டர்நேஷனல் ஆகிய விமான சேவை நிறுவனங்கள் இலங்கையின் பொருளாதார நிலைமைகள் சீரடையும் வரை இலங்கைக்கான சேவைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
மிரட்ட வைக்கும் சீன கப்பலால் இந்தியாவுக்கு ஏற்பட போகும் பாதிப்புக்கள்..! வெளியாகிய அதிர்ச்சி தகவல்