ஐரோப்பா முழுவதும் 2,000 விமானங்கள் ரத்து: இழப்பீடு கோரும் விமான நிறுவனங்கள்
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் குழப்பத்தால் ஐரோப்பா முழுவதும் சுமார் 2,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இழப்பீடு சீர்திருத்தத்தை விமான நிறுவனங்கள் கோரியுள்ளன.
கடந்த மூன்று நாட்களில் 2,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒரு மணி நேர வான் கட்டுப்பாட்டு அமைப்பு செயலிழந்ததைத் தொடர்ந்து, விமான அட்டவணைகள் குழப்பமடைந்ததால் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்துள்ளனர்.
பெருந்தொகை இழப்பு
உணவு, தங்குமிடம் மற்றும் மாற்றுப் பயணத்திற்கான செலவுகளை வாடிக்கையாளர்கள் திரும்பப் பெறுவதால், விமான நிறுவனங்களுக்கு 100 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் வருவாய் இழப்பு ஏற்படும் என்று தொழில்துறை அமைப்பான Iata கணித்துள்ளது.
இருப்பினும் இது மிகவும் நியாயமற்றது எனவும், இந்த கோளாறு ஏற்பட்டமையால் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு சிறிதளவு நிதியை கூட கொடுக்கவில்லை" என்றும் Iata அமைப்பின் இயக்குனர் ஜெனரல் வில்லி வால்ஷ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் "தாமதங்கள் மற்றும் ரத்துசெய்தல்களுக்கு பொறுப்பானவர்கள் பயணிகள் இழப்பீடு எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை இங்கிலாந்து பார்க்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மோசமான விமானத் தரவுகளால் ஏற்பட்ட தடுமாற்றம் சரி செய்யப்பட்டுவிட்டதாகவும், எதிர்காலத்தில் இந்த தவறு ஏற்படாது என்றும் இங்கிலாந்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு உயர் அதிகாரி மார்ட்டின் ரோல்ஃப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 11 மணி நேரம் முன்

ராஜியை சிக்கலில் மாட்டிவிடும் சக்திவேல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri
