நாட்டில் காற்றின் தரம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
நாட்டில் அடுத்த 24 மணிநேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆரோக்கியமான நிலையிலும், குருநாகல், காலி, புத்தளம், பதுளை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் மிதமான நிலையிலும் காற்றின் தரம் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம்
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமான அளவிலும், யாழ்ப்பாணம், வவுனியா, கண்டி, கேகாலை, நுவரெலியா, எம்பிலிப்பிட்டி, முல்லைத்தீவு, அம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமான நிலையிலும் காணப்பட்டது.
ஆரோக்கியமான நிலை
அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான நகரங்களில் ஆரோக்கியமான நிலையிலும், குருநாகல், காலி, புத்தளம், பதுளை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் மிதமான நிலையிலும் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமான நிலையில் காணப்படும். அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் குறிப்பாக காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 3.00 மணி முதல் 4.00 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.






ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 16 மணி நேரம் முன்

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
