நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் கொழும்பு 07, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய சில பகுதிகளில் ஆரோக்கியமான நிலையில் காற்றின் தரம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில், பெரும்பாலான பகுதிகளில் இலங்கை காற்றின் தரச் சுட்டெண் மிதமான அளவிலும், கொழும்பு 07, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமான நிலையிலும் காணப்பட்டது.
காற்றின் தரச் சுட்டெண்
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் தரச் சுட்டெண் 40 மற்றும் 84 க்கு இடையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெரும்பாலான பகுதிகளில் மிதமான நிலையிலும், கொழும்பு 07, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமான நிலையிலும் காணப்படும்.
நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படும். அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் பிற்பகல் 1.00 மணி முதல் 2.00 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri