நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் காற்றின் தரம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
பெரும்பாலான பகுதிகளில் இன்று மிதமான நிலையில் அதாவது 42 மற்றும் 68இற்கு இடையில் காற்றின் தரம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம், வவுனியா, நுவரெலியா, புத்தளம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் நல்ல நிலையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்றின் தரம் மிதமான நிலை
நாட்டில் நேற்று (19) பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையிலும் யாழ்ப்பாணம், வவுனியா, நுவரெலியா, புத்தளம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் நல்ல நிலையிலும் காணப்பட்டது.
அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் வேளைகளில், குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் 1 மணி முதல் 2 மணி வரை காற்றின் தரக் குறியீடு (AQI) ஆரோக்கியமற்று காணப்படும்.
நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு அடுத்த 24 மணிநேரத்துக்குள் மிதமான அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
