இந்தியாவின் புதுடெல்லியில் காற்றுத் தரம் மீண்டும் மோசமான நிலையில்
இந்திய தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்றுத் தரக் குறியீடு (AQI) மீண்டும் ‘அதிக மோசம்’ (Severe) என்ற நிலையை நெருங்கியுள்ளது.
இன்று (28.12.2025) காலை பதிவாகியுள்ள நிலவரப்படி AQI அளவு 391ஐ எட்டியுள்ளதாக இந்திய மத்திய மாசுக் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள 40 காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களின், 20 நிலையங்களில் ‘அதிக மோசம்’ என்ற நிலை பதிவாகியுள்ளது.
நிலைமை மிகவும் மோசமாகியுள்ள பகுதிகள்
ஆனந்த் விஹார் பகுதியில் அதிகபட்சமாக 445 AQI பதிவாகியுள்ள நிலையில், ஷாதிபூர் பகுதியில் 443 AQI பதிவாகியுள்ளது.
மேலும் ரோஹிணி, நேரு நகர், வாசிர்பூர், ஜஹாங்கீர்புரி, விவேக் விஹார், பட்ட்பர்கஞ்ச், ஒக்லா பேஸ் - 2, பஞ்சாபி பாக் உள்ளிட்ட பல பகுதிகளில் AQI அளவு 400ஐ கடந்துள்ளது.

NSIT துவாரகா பகுதியில் மட்டும் காற்றுத் தரம் ‘மோசம்’ (Poor) என்ற நிலையில் இருந்தது. அங்கு 214 AQI பதிவாகியுள்ளது.
காற்றுத் தர வகைப்பாடு
காற்றுத் தர வகைப்பாடு: - 0–50: நல்லது - 51–100: திருப்திகரமானது - 101–200: மிதமானது - 201–300: மோசம் - 301–400: மிகவும் மோசம் - 401–500: அதிக மோசம்.
இதேவேளை, காற்றுத் தரம் மோசமடைந்ததன் காரணமாக, டெல்லி–என்.சி.ஆர் பகுதிகளில் மெல்லிய புகைப்படலத்துடன் பார்வைத் தெளிவு குறைந்துள்ளது. காற்றின் வேகம் குறைவாக இருப்பதால் மாசுபாடு தேங்கி, AQI அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜேர்மனியில் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் மற்றொரு ஐரோப்பிய நாட்டிற்க்கு அதிகரிக்கும் வணிக வாய்ப்புகள் News Lankasri
கலவையான விமர்சனங்கள்.. அவதார் 3 இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு? பாக்ஸ் ஆபிஸ் விவரம் Cineulagam