பதுளை நகர மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
பதுளை நகரைச் சுற்றியுள்ள பகுதியில் வாழும் மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மையம் அவசர அறிவிப்பொன்றை வெளியி்ட்டுள்ளது.
குறித்த பகுதியில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வழிமுறை
இது தொடர்பில் பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாவது, தற்போது நாட்டில் மூடுபனி, நச்சுப் புகை பரவல் காரணமாக இதய நோய், சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் முதியவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.
இதவேளை, நாட்டில் காற்றின் தரம் மிக மோசமாக இருப்பதால் எதிர்வரும் நாட்களில் முகக்கவசங்களை அணியுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இயலுமான வரை, முகக்கவசங்களை அணியுமாறும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் கோரியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |