காலநிலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள மாற்றம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் வளி மாசுவின் அளவு மீண்டும் இயல்பை விட உயர்ந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலை இன்று(22.01.2023) தொடர்ந்து காணப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
வளிமண்டலம் வழமைக்குத் திரும்பும்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,இலங்கையில் வளி மாசுவின் அளவு மீண்டும் இயல்பை விட உயர்ந்துள்ளது. இந்நிலைமையில் இருந்து நாளை (23.01.2023) வளிமண்டலம் வழமைக்குத் திரும்பும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் தென்பகுதியில் மேல், சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த 36 மணி நேரத்திற்கான காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(22.01.2023) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த 36 மணி நேரத்திற்கான காலநிலை
இதன்படி, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும் இடியுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
