750 இலட்சம் சொத்து விவகாரம் : நீதிமன்றத்திற்கு பதறி ஓடிய விமல்!
விமல் வீரவன்ச அமைச்சராக செயற்பட்ட 05 வருட காலப்பகுதிக்குள் 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாகச் சேர்த்ததாகக் கூறி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்தார்.
குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதால், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கொழும்பு உயர் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்திற்கு பின்னர் முன்னிலையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினர் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புக்கள் நிகழ்ச்சி....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |