கொழும்பில் மோசமடைந்துள்ள காற்றின் தரம் - பொது மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் நேற்று முதல் வளிமண்டலத்தின் நிலை ஆரோக்கியமற்றதாக காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, முற்பகல் 11.30 மணியளவில், நாட்டின் மிகவும் மோசமான காற்று நிலை கொழும்பு நகரிலிருந்து பதிவாகியுள்ளது.
கொழும்பின் காற்றின் தர மதிப்பு 135 அலகுகள் என்று நிறுவனம் கூறியுள்ளது.
பதிவாகியுள்ள காற்றின் தர மதிப்பு

மேலும், கம்பஹா நகரத்தின் காற்றின் தர மதிப்பு 130 அலகுகளாகவும், யாழ்ப்பாண நகரம் 128 அலகுகளாகவும், கொழும்பு பத்தரமுல்லை மேற்குப் பகுதியில் 121 அலகுகளாகவும் பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும், காற்றின் தரக் குறியீட்டிற்கமைய, 101-150 அலகுகள் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
சுவாச பிரச்சினைகள் போன்றவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முகக் கவசம் அணிந்துக் கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam