நடுவானில் மோதிக்கொள்ளவிருந்த ஏர் இந்தியா, நேபாள் ஏர்லைன்ஸ் விமானங்கள்! மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்
ஏர் இந்தியா விமானமும் நேபாள் ஏர்லைன்ஸ் விமானமும் நடுவானில் மோதிக்கொள்ளவிருந்த நிலையில், தானியங்கி எச்சரிக்கை அமைப்பால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை மலேசியாவிலிருந்து நேபாள் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தலைநகர் காத்மாண்டு நோக்கி பயணித்துள்ளது.
இதன்போது டெல்லியிலிருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்றும் காத்மாண்டு நோக்கி வந்துள்ளது. ஏர் இந்தியா விமானம் 19 ஆயிரம் அடி உயரத்திலும் நேபாள் ஏர்லைன்ஸ் விமானம் 15 ஆயிரம் அடி உயரத்திலும் பறந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து உடனடியாக நேபாள் ஏர்லைன்ஸ் விமானம் 7 ஆயிரம் அடி உயரத்துக்கு இறக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அலட்சியமாக செயற்பட்டதாக விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் 3 பேரை நேபாள் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.