நடுவானில் திடீரென தீப்பற்றி எரிந்த ஏர் இந்தியா! விரைந்து செயற்பட்ட விமானி
சுமார் 1000 அடி உயரத்தில் 184 பயணிகளுடன் நடுவானில் பறந்த ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜினில் திடீரென தீ பற்றியதால் விமானம் மீண்டும் அபுதாபியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவிற்கு சொந்தமான 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பி737-800' என்ற விமானம் ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு நோக்கி 184 பயணிகளுடன் கிளம்பியுள்ளது.

விமானம் புறப்பட்டு 1000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, இன்ஜீனில் தீப்பிடித்து புகை வெளியேறியதனை கண்டுபிடித்த விமானி உடனடியாக விமானத்தை திருப்பி அபுதாபியில் தரையிறக்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அனைவரும் நலமுடன் உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளதாக இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri