240 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்திய விமானம்.. ஈரானின் தடையால் ஏற்பட்ட பரபரப்பு
டெல்லி விமான நிலையத்திலிருந்து நியூயோர்க் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவின் ஏர்பஸ் A350 விமானம், ஈரான் தற்காலிகமாக தனது வான்வழியை மூடியதன் காரணமாக, புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட போதிலும், 240 பயணிகளுடன் ஓடுபாதையில் நிறுத்த முற்பட்ட போது இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.
பயணிகள் விமானத்திலேயே இருந்த நிலையில், ஓடு பாதையிலிருந்து நிறுத்துமிட பகுதிக்கு டெக்ஸியிங் செய்து கொண்டிருந்தபோது, விமானத்தின் வலது பக்க என்ஜினுக்குள் சரக்கு பெட்டி இழுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இயந்திர கோளாறு
சம்பவ நேரத்தில் அடர்ந்த பனிமூட்டம் இருந்ததன் காரணமாக மிகவும் சிரமமாக இருந்ததாக விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
✈️🧳 #AirIndia #A350 #airplane #engine damaged after ingesting #cargo container at #DelhiAirport 🚨⚙️ https://t.co/qNHtluwkpn pic.twitter.com/6V9tmw6yfM
— Economic Times (@EconomicTimes) January 16, 2026
மேலும் இதன்போது விமானத்தில் சுமார் 240 பயணிகள் இருந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் ஒரு சர்வதேச ஊடகத்திற்கு தெரிவித்துள்ளது.
அதேநேரம், விமான குழுவினரின் சரியான எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அவர்கள் ஆறு முதல் எட்டு பேர் வரை இருந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் விமானத்தின் இன்ஜினில் சேதம் ஏற்பட்டதை அடுத்து, அந்த விமானம் பழுதுபார்ப்பிற்காக தரையில் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

