ட்ரோன்களை இயக்க வேண்டாம்: விமானப்படை எச்சரிக்கை
இலங்கையில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை (Drones) இயக்குவது தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை (SLAF) பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
இது தொடர்பாக விமானப்படை விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உள்நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் என எவராயினும், இலங்கைக்குள் ட்ரோன்களை பறக்கவிடுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து முறையான அனுமதியைப் பெறுவது கட்டாயமாகும்.

இதற்கு முன்னர் அதிஉயர் பாதுகாப்பு வலையமைப்பிற்குள் (High-Security Zones) அனுமதியின்றி ட்ரோன்களை இயக்கிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமானப்படை சுட்டிக்காட்டியுள்ளது.
ட்ரோன்களை இயக்க விரும்பும் எவரும் தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாக தேவையான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், ட்ரோன் இயக்குபவர்கள் சட்ட ரீதியான சிக்கல்கள் அல்லது அசௌகரியங்களுக்கு உள்ளாவதைத் தடுப்பதற்கும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு அனுமதி மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் (CAASL) வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் தேவையற்ற சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்க முடியும் என விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.
மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான் Cineulagam