கொழும்பில் விமானப்படை வீரரின் விபரீத முடிவு
கொழும்பு - பம்பலப்பிட்டியில், பொன்சேகா பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து விமானப்படை வீரர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை அபயபுர பகுதியைச் சேர்ந்த (36) வயதுடைய விமானப்படை வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம்
இந்த விமானப்படை உறுப்பினர் மேலும் பலருடன் பொன்சேகா பிளேஸில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது இந்த விபரீத முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த துப்பாக்கிச்சூடு தற்கொலை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan