வர்த்தகர் ஒருவரிடம் பணமோசடி செய்த விமானப்படை சிப்பாய் கைது
உணவக உரிமையாளரான வர்த்தகர் ஒருவரிடம் பணமோசடி செய்த விமானப்படை சிப்பாய் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் களுத்துறை- ஹந்தபான்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய விமானப்படை சிப்பாய் என்று மெல்சிறிபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் ,குறித்த விமானப்படை சிப்பாய் பேருந்து ஒன்று விற்பனைக்கு இருப்பதாக கூறி சமூக ஊடகங்களில் விளம்பரங்களைப் பதிவிட்டுள்ளார்.
கைது
அதனைக் கண்ணுற்ற குருணாகல் – மெல்சிறிபுர பிரதேசத்தில் வசிக்கும் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர், விமானப்படை சிப்பாய்க்கு அழைப்பெடுத்து விபரம் கோரியுள்ளார்.
அதன் போது பேருந்தை வேறொருவருக்கு விற்பனை செய்யாமல் இருப்பதாயின், 50 ஆயிரம் ரூபா முற்பணத்தை வங்கியில் வைப்புச் செய்யுமாறு விமானப்படை சிப்பாய் தெரிவித்துள்ளார்.
அதனை நம்பி வர்த்தகர் பணம் வைப்புச் செய்துள்ள நிலையில், விமானப்படை சிப்பாய் பணத்தைப் பெற்று பேருந்தை வழங்காமல் மோசடி செய்துள்ளார்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட உணவக உரிமையாளர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதன்படி விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரான விமானப்படை சிப்பாயைக் கைது செய்துள்ளனர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மெல்சிறிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |