பொலிவியாவில் விமானப்படை விமானம் விபத்து: 15 பேர் பலி
பொலிவியாவின் மேற்குப் பகுதியில் உள்ள எல் ஆல்டோ (El Alto) நகரில், அந்நாட்டு விமானப்படைக்குச் சொந்தமான சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
சாண்டா குரூஸ் நகரிலிருந்து வந்த C-130 ஹெர்குலிஸ் விமானம், எல் ஆல்டோ விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுதளத்தை விட்டு விலகி அருகில் இருந்த வாகனங்கள் மீது மோதியது.
விமானத்தில் இருந்த 8 பேர் உட்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர். 31 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை
இந்த விமானம் பொலிவிய மத்திய வங்கிக்குத் தேவையான புதிய பணத்தாள்களை ஏற்றி வந்ததாகப் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

விபத்திற்குப் பிறகு சிதறிக் கிடந்த பணத்தாள்களை எடுக்க முயன்ற கும்பலை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
விபத்தின் போது நிலவிய மோசமான வானிலையே இதற்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
பெங்களூரு நட்சத்திர ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்ட 2 சிறுமிகள்: தந்தை எடுத்த விபரீத முடிவு News Lankasri
சூட்கேஸில் இருந்தது மனித சடலம் அல்ல: உயர் ரக செக்ஸ் பொம்மை: அவுஸ்திரேலிய பொலிஸார் விளக்கம் News Lankasri
சினேகா - பிரசன்னா ஜோடியின் மகன், மகளின் சமீபத்திய புகைப்படங்கள்.. எப்படி வளர்ந்துவிட்டார்கள் என்று பாருங்க Cineulagam