மாங்குளம் பகுதியில் உணவகங்கள் மீது திடீர் சோதனை
முல்லைத்தீவு (Mullaitivu) மாங்குளம் பகுதிக்குட்பட்ட உணவகங்கள் மீது திடீரென சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மாங்குளம் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள உணவகங்களில் இன்றையதினம் (18) ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரிகளின் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
குறித்த நடவடிக்கையின் போது மாங்குள பகுதியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகம் மூடப்பட்டதுடன். மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுகள் இனங்காணப்பட்டு உடனடியாக அழிக்கப்பட்டுள்ளன.
மூடப்பட்ட உணவகங்களில் இனங்காணப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்வதற்கு 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாமல் போனால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
