இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படும்-இந்தியா
அனைத்து விதத்திலும் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்தியா நிதியுதவி வழங்காது என வெளியான செய்திகள்
இந்தியா தொடர்ந்தும் இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்காது என வெளியாகியுள்ள செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை கூறியுள்ளது.
இலங்கை எதிர்நோக்கியுள்ள கஷ்டங்களை போக்குவதற்காக இந்தியா இந்த ஆண்டு நான்கு பில்லியன் டொலர்களை இருத்தரப்பு உதவியாக வழங்கியுள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார கஷ்மங்களை போக்குவதற்காக உதவிகளை வழங்க இருத்தரப்பு மற்றும் பல்தரப்பு பங்காளிகளுடன் இந்தியா ஆதரவுடன் செயற்பட்டு வருகிறது.
அபிவிருத்தி திட்டங்களுக்காக 3.3 அமெரிக்க பில்லியன் டொலர்கள்
இந்தியா இருத்தரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்புகளுக்கான திட்டங்களுக்காக இலங்கையில் 3.5 பில்லியன் டொலர்களை பயன்படுத்தியுள்ளது.
இலங்கையின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் குறிப்பாக நீண்டகால முதலீடுகளை ஊக்குவிக்கும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராயம் மேலும் தெரிவித்துள்ளது.