இலங்கைக்கு கிடைக்கும் தொடர் உதவிகள்
உலக உணவுத் திட்டம், இந்த வாரம் வறுமை அதிகமாக இருக்கும் நுவரெலியா மற்றும் கொழும்பில் உள்ள 15,000 இலங்கையர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாம் ஒயில் ஆகியவற்றை வழங்க ஆரம்பித்துள்ளது.
இந்த உதவியானது, 6.3 மில்லியன் இலங்கையர்கள் பட்டினியில் இருக்கும் வேளையில், உலக உணவு திட்டத்துக்கு, ஜப்பான் வழங்கிய 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ( 540 மில்லியன் ரூபாய் ) நன்கொடை மூலம் சாத்தியமாகியுள்ளது.
தேசிய பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 380,000 மாணவர்களுக்கு உதவவும் இந்த நிதி வழங்கப்படவுள்ளது. இந்தநிலையில் பாதிக்கப்படும் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்று இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொஷி ஹிடேகி ( Mizukoshi Hideaki) கூறியுள்ளார்.
குறைந்த பட்சம் 6.3 மில்லியன் அல்லது 10 இலங்கையர்களில் ஒவ்வொரு மூன்று பேர், இப்போது போதுமான உணவு இல்லாமல் வாழ்கின்றனர். உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் 90% உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ சிவப்பு உளுத்தம் பருப்பு, ஒரு முக்கிய உணவு, இப்போது 580 ரூபாய், ஒரு கிலோ தோரா என்ற காணாங்கெளுத்தி வகை மீன் (தோரா) 5,600 ரூபாவுக்கு விற்பனையாகிறது.
பொருளாதார நெருக்கடியால், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் குறைந்த திறன் கொண்டவர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.
ஊட்டச்சத்து குறைபாட்டில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்
குழந்தை பிறக்கும் நிலையில் உள்ள 34.6% பெண்களுக்கு இரத்த சோகை உள்ளது. தெற்காசியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் விகிதத்தில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதேவேளை, உலக உணவு திட்டம், நுவரெலியா, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும்
மன்னார் முதல் ஐந்து இடங்களுக்கு உணவு விநியோகம் செய்து வருகிறது. இதில்
இலங்கை தேசிய பல பரிமாண வறுமை சுட்டெண்ணின் படி, நுவரெலியாவில், ஐந்தில்
இரண்டு பங்கு அல்லது 44.2% பேர் வறுமையில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது