ஏ.ஐ தொழில்நுட்பம் உலகையே மாற்றவல்லது: ரிஷி சுனக்
ஏ.ஐ (ai - artificial intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகையே மாற்றவல்லது என்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
லண்டனில் தொழில்நுட்ப வாரம் கருத்தரங்கில் உரை நிகழ்த்தும் போதே ரிஷி சுனக் இந்ந விடயத்தை சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,செயற்கை நுண்ணறிவால் பலர் வேலையை இழப்பது குறித்த அச்சம் கொண்டுள்ளதை கவனத்தில் வைத்திருக்கின்றேன்.
தொழில்நுட்ப வளர்ச்சி
சுகாதாரம் உணவு போன்ற பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு உலகை மாற்றும்.
எந்த ஒரு நாட்டையும் உலகிற்கு தலைமை தாங்கச் செய்யும் தொழிநுட்பமாக இது காணப்படும்.
தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி குறித்து வியப்பு அதிகரித்துள்ளது.
அமெரிக்கா சீனாவை அடுத்து இங்கிலாந்து தொழில்நுட்ப வளர்ச்சியில் மூன்றாவது இடத்தில் காணப்படுகிறது.”என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |