லிசா எனும் ஏஐ செய்தி வாசிப்பாளர்: செயற்கை நுண்ணறிவின் அடுத்தகட்டம்
இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் லிசா என்ற மெய்நிகர் செயற்கை செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இளம்பெண் வடிவத்தில் தோற்றமளிக்கும் இந்த செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர், ஆங்கிலம் மற்றும் ஒடியா மொழிகளில் செய்திகளை வாசிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
OTV’s AI news anchor Lisa has the capability to speak in multiple languages. She will seamlessly present news in Odia apart from English for OTV and its digital platforms.#AIAnchorLisa #Lisa #Odisha #OTVNews #OTVAnchorLisa pic.twitter.com/8Q0t3m6NEE
— OTV (@otvnews) July 9, 2023
மனிதனைப்போன்ற செயற்பாடு
முற்றிலும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட இந்த செய்தி வாசிப்பாளர் பார்ப்பதற்கு உண்மையான மனிதன் போலவே காட்சியளிப்பதே இதன் சிறப்பம்சமாகும்.
இந்த புதுவிதமான சிந்தனை பலர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
இருப்பினும் 'இனிமேல் மனித செய்தி வாசிப்பாளர்களுக்கு வேலை இல்லாமல் போகும் அபாயம் இருப்பதாகவும்' சிலர் கருத்து தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.