விஜித ஹேரத் தொடர்பில் போலிக் காணொளி உருவாக்கப்பட்டதாக முறைப்பாடு
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொடர்பில் போலிக் காணொளி உருவாக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் விஜித ஹேரத்தை இழிவுபடுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி காணொளி தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் செயற்பாட்டாளர் ஒருவருக்கு எதிராக இவ்வா முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலிக் காணொளி தயாரித்து பகிர்ந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமைச்சரின் இணைப்புச் செயலாளரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரையும் ஜே.வி.பி கட்சியையும் இழிவுபடுத்தும் நோக்கில் காணொளி தயாரிக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan