ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் அநுரவுக்கு எழுதியுள்ள கடிதம்
இலங்கையில்(Sri Lanka) சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட, முக்கியமான சட்ட சீர்திருத்தங்களை உடனடியாக செயற்படுத்த வேண்டுமென்று, ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை(Anura Kumara Dissanayake) வலியுறுத்தியுள்ளது.
எழுத்துப்பூர்வ முறையீடு ஒன்றின் ஊடாக, ஆணையகத்தின் கொள்கை மற்றும் திட்டங்களின் இயக்குநர் பசில் பெர்னாண்டோ இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
ஆசிய மனித உரிமைகள் ஆணையகம்
நாட்டின் சட்ட மற்றும் நீதி அமைப்புகளில் உள்ள முக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான அவசரத் தேவையை அவர் அந்த முறையீட்டில் வலியுறுத்தியுள்ளார்.
உடனடி சீர்திருத்தம் தேவைப்படும் மூன்று முக்கியமான பகுதிகளை ஏற்கனவே ஆணையகம் அடையாளம் கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், நீதித்துறை செயல்முறையை விரைவுபடுத்துவதற்கும் நீதி வழங்குவதில் தாமதங்களைக் குறைப்பதற்கும், மேல் நீதிமன்றங்களில் கடுமையான குற்றவியல் வழக்குகளின் பிற்போடப்படாத நாளாந்த விசாரணையை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை கோரியுள்ளார்.
இந்தநிலையில், லஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராட விரிவான சட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டும் என்று கோரியுள்ள ஆசிய மனித உரிமைகள் ஆணையகம், இது ஆட்சி மற்றும் பொறுப்புக்கூறலில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுதந்திரம், செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக அதை சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தையும் ஆணையகம் எடுத்துரைத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
