வெடித்து சிதறிய உடல்களின் DNA சோதனைக்காக வைத்தியசாலையில் காத்திருக்கும் உறவுகள்
இந்தியா - அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்காக அவர்களின் உறவினர்கள் அகமதாபாத் வைத்தியசாலையில் காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த பலரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை அடையாளம் காண உதவும் வகையில் டிஎன்ஏ (DNA) பரிசோதனைகளுக்காக காத்து கொண்டுள்ளனர்.
DNA சோதனை
விபத்து நடந்த இடத்திலிருந்து அனைத்து உடல்களும் அவற்றின் எச்சங்களும் அகற்றப்பட்டுவிட்டதாக இந்திய பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இறந்தவர்களின் உடல்கள் மற்றும் எச்சங்களை கண்டெடுப்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டதாகவும் அவற்றை சரியாக அகற்ற பல மணிநேரம் எடுத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து மிக தீவிரமாக இருந்ததால், பல உடல்கள் சிதறிய நிலையில், உடல்களை காணும் செயல்முறை நிறைவுக்கு வர நீண்ட நேரம் ஆகலாம் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.





சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri