சட்டத்தரணிகள் சங்கம் மீது அதிருப்தி வெளியிட்டுள்ள அகிம்சா
சட்டமா அதிபரின் முடிவுகளை மறுபரிசீலனை செய்வது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து, கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க, அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அனுரா பி.மெத்தேகொடவுக்கு எழுதிய கடிதத்தில், தனது அதிருப்தியை அவர் வெளியிட்டுள்ளார்.
சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரம்
குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், இலங்கை குற்றவியல் நீதி அமைப்பின் நேர்மையைப் பாதுகாக்கவும், நடப்பு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து, சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதிக்கு மறைமுக அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக, அகிம்சா விக்ரமதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

தனது தந்தையின் வழக்கில், சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரம் அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவரது அலுவலகத்தின் சுதந்திரம் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டதாக கூறி, போராடுவதற்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் முடிவு பாசாங்குத்தனத்தால் நிறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri