பங்கசு நோய்த் தாக்கத்தினால் விவசாயம் பாதிப்பு! விவசாயிகள் விசனம் (Photos)
கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பகுதிக்குட்பட்ட கந்தளாய் வான் எல அக்போ கம முள்ளிப்பொத்தானை தம்பலகாமம், அயிலியடி போன்ற பகுதிகளில் பங்கசு நோய்த் தாக்கம் அதிகரித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலே பங்கசு நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இரவு பகலாக விவசாயத்திற்காக பாடுபட்டும் பிரயோசனமற்று காணப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு கிருமி நாசினிகள் தெளித்தும் பங்கசு நோயினை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் விசனம்
கடந்தகாலத்தில் பசளை வகைகளை அதிக விலை கொடுத்து வாங்கி விவசாயத்தை ஆரம்பித்த பின் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதாகவும் இம்முறை பங்கசு நோய் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
நகைகளை அடகு வைத்து கடன்வாங்கி கிருமி நாசினி பயன்படுத்தியும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவைகள் தொடர்பாக விவசாய அமைச்சின் அதிகாரிகள் பிரதேச செயலக விவசாய
உத்தியோகத்தர்கள் களத்தில் இறங்கி பார்ப்பதில்லை எனவும் விவசாயிகள் குற்றம்
சுமத்துகின்றனர்.









மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
