இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட விவசாயப் பொருட்கள்: மூவர் கைது
இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்டு வேலணையில் இறக்கிய ஒருதொகை விவசாயப் பொருள்களை, இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது கைப்பற்றியுள்ளனர்.
தமிழகம், இராமேஸ்வரம் ஊடாகக் கடத்தி வரப்பட்ட எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 39 மூடை விவசாயப் பொருள்களே இவ்வாறு நேற்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளன.
கடத்தி வரப்பட்ட மூடைகள் அனைத்தும் சென்னையில் இருந்து பொதி சேவை ஊடாக இராமநாதபுரத்துக்கு எடுத்து வந்தமைக்கான எழுத்துக்கள் மூடைகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
பொருள்களைக் கைப்பற்றிய படையினர்
இந்தப் பொருள்களைக் கைப்பற்றிய படையினர் இவற்றை உடமையில் வைத்திருந்த மூன்று பேரையும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருள்கள் மற்றும் சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறைப் பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கடத்தி வரப்பட்ட பொருள்கள் தற்போது இலங்கை நாணயத்தில் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        