முல்லைத்தீவில் அரச அதிகாரிகளை குற்றம் சாட்டும் விவசாயிகள்
கொக்குதொடுவாய், கொக்குளாய், கர்நாட்டுக்கேணி பகுதிகளில் அறுவடை செய்ய தயார் நிலையில் இருந்த நிலங்கள் அழிவடைந்துள்ளதாகவும் அதற்கு அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலே காரணம் என விவசாயிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த விவசாய பகுதிகளுக்கு செல்லும் வீதியில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது.
இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளதோடு அறுவடை செய்த நெல்லை கடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டிற்கு பின்னர் குறித்த பகுதி வீதி புனரமைக்கப்படவில்லை. இதனால் மழைகாலங்களில் விவசாயம் செய்து அறுவடை செய்த நெல்லை, வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாது குறித்த பகுதி விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்துள்ளார்கள்.
இந்நிலையில் இறுதியாக நடந்த கரைதுறைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த பாதையினை மதிப்பீடு செய்து 100மீற்றர் தூரம் தற்காலிக புனரமைப்பு செய்து தரும்படி கோரியிருந்தும் புனரமைப்பு செய்து கொடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆதிரை மட்டும் ஸ்பெஷலா.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் செய்த விஷயம்! கடுப்பான விஜய் சேதுபதி Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri