மட்டக்களப்பில் மண் அகழ்வால் பாதிக்கப்ப்டும் விவசாய நிலங்கள்: நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழ்வுகள் காரணமாக விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் அதிகளவான மண் அகழப்படுவதன் காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் இதன்போது விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழுக்கூட்டம் நேற்றையதினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
எதிர்வரும் காலபோக நெற்செய்கை ஆரம்பமாகவுள்ள நிலையில் அது தொடர்பில் ஆராயும் வகையில் இந்த கூட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்போது ஏறாவூர்ப்பற்று கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் முன்னெடுக்கப்படும் மண் அகழ்வுகள் காரணமாக விவசாய காணிகள் பாதிக்கப்படுவதுடன், வீதிகளும் போக்குவரத்து செய்யமுடியாத நிலையில் உள்ளதாகவும் மண் அகழ்வுகளை நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பிரதேச செயலகப்பிரிவுகளில் உள்ள அதிகாரிகள், பொலிஸார், கனிம வள திணைக்களம் உட்பட அனைவரையும் ஒருங்கிணைத்து இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கையெடுக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது உறுதியளித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் எதிர்வரும் காலத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விவசாய நடவடிக்கைகளுக்குநீர்பாசனத்தினைப்பெற்றுக்கொள்ளுதல்,இலவச உரம்பெற்றுக்கொள்ளுதல் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போதுஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது பெரும்போக அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் விவசாயிகளுக்கான முளை நெல் வழங்குதல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.புண்ணியமூர்த்தி, மாவட்ட நீர்பாசன திணைக்கள பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், மாகாண நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், விவசாய திணைக்களங்களின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.










பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
