மட்டக்களப்பில் விவசாயத்துறை மேம்படுத்தல் தொடர்பான மீளாய்வுக்கூட்டம் (Video)
மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயத்துறை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்துவருவதாக இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய மீளாய்வுக்கூட்டம் நேற்றையதினம் (26.06.2023) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
நெல் கொள்வனவு செயற்பாடுகள்
இதன்போது விவசாய துறைசார்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து மீளாய்வுசெய்யப்பட்டதுடன் அவை தொடர்பில் உள்ள குறைபாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அறுவடை ஆரம்பமாகவுள்ளதனால் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நெல் கொள்வனவு செயற்பாடுகள் குறித்தும் ஆரயப்பட்டுள்ளன.
அத்துடன் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீர்பாசன வசதிகளை பெற்றுக்கொள்ளும்போது எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் விவசாய அமைப்புகளின் கருத்துகளும் பெறப்பட்டு ஆராயப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், அரசாங்க அதிபர் கே.பத்மராஜா, மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், திணைக்களங்களின் தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |






செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 11 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
