சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்-செய்திகளின் தொகுப்பு
சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்டத்திலான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,“சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக குழு மற்றும் அரச அதிகாரிகளுக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவில்லை இருப்பினும் அவர்கள் கலந்துரையாடல்கள் மூலம் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.
அத்துடன் குறித்த உடன்பாடுகள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் பகிரங்கமாக அறிவிக்கப்படும். ஆனால் அதற்கு சிறிது காலம் எடுக்கும். மேலும் குறித்த உடன்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.
உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னரே சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் இணைந்து செயற்படும்.
அவ்வாறு கைச்சாத்திடப்படும் ஒப்பந்தமே பகிரங்கப்படுத்தப்படும்.”என கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri