மன்னாரில் காற்றாலை நிர்மாண பணிகளை தொடர முழு இணக்கம்
மன்னாரில் காற்றாலை நிர்மாண பணிகளை தொடர இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் தீவில் புதிதாக 14 காற்றாலைகளை அமைப்பதற்கு எதிரான போராட்டம் மன்னாரிலும், பிற இடங்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், அந்தப் போராட்டங்களை இடைநிறுத்தி மேற்படி 14 காற்றாலைகளையும் தொடர்ந்து அமைப்பதற்கான இணக்கப்பாடு நேற்று முன்தினம் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவுக்கும் மன்னார் ஆயர் வண. ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளைக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போது எட்டப்பட்டுளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மன்னார் காற்றாலை பிரச்சினைக்கு தீர்வு
மன்னார் காற்றாலைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்றும், 14 காற்றாலைகளையும் தொடர்ந்து அமைப்பதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகத்தில் வன்னி மாவட்ட சிரேஷ்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைச் சந்தித்துச் சுருக்கமாக உரையாடிய சமயம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார் என்றும் அறியவந்துள்ளது.
இதற்கு இடையில் மன்னாரில் ஏற்கனவே 30 காற்றாலைகள் அமைக்கப்பட்டமையால் நீரோட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பு, வெள்ளத்தை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆகியவை குறித்து ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று மன்னாரில் இன்று நடைபெற இருப்பதாகத் தெரிகின்றது.
அதேசமயம், மன்னாரில் கனிய மணல் அகழ்வது தொடர்பான விடயத்திலும் சிக்கல் நீடிக்கும் நிலையில் அது தொடர்பான அரச உயர்மட்டக் கூட்டம் ஒன்று நாளை கொழும்பில் நடைபெற இருப்பதாகத் தெரியவருகின்றது.
மன்னாரில் காற்றாலைகள் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதியோடு இணக்கம் ஒன்று காணப்பட்டிருப்பதாகக் கொழும்பில் தெரிவிக்கப்பட்டாலும், அந்தக் காற்றாலை அமைப்புக்கு எதிராகப் போராடி வருகின்ற பொதுத் தரப்புகளுக்கு அது பற்றிய தகவல் இன்னமும் தெரிவிக்கப்படவில்லை என்று ஒரு செய்தி வட்டாரம் குறிப்பிட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri