யாழ்.மாநகரசபை அமர்வில் பொலிஸாரின் அராஜகத்துக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றம்
யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்பில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
யாழ். மாநகர சபைபின் மாதாந்த அமர்வு மாநகர சபையின் மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போது சபையின் ஆரம்பத்தில் தியாக தீபம் திலீபனுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் வைத்து கடந்த 23ஆம் திகதி யாழ். மாநகர சபை உறுப்பினர் ரஜீவ்காந் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை மற்றும் ஏற்றப்பட்ட தீபத்தைப் பொலிஸார் காலால் தட்டிவிட்டமை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை, யாழ். மாநகர சபை அமர்வில் இன்று நடைபெற்ற தியாக தீபம் திலீபனுக்காக அஞ்சலி நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 47 நிமிடங்கள் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி Manithan