பிரான்ஸ் அரசியலில் மிக முக்கியமான நபர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு
பிரான்ஸ் அரசியலில் மிக முக்கியமான நபராகக் கருதப்படும் 86 வயது ஜெக் லாங் மற்றும் அவரது மகள் கரோலின் லாங் (Caroline Lang) ஆகியோர் மீது "வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி" (Money Laundering) தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையை பிரான்ஸ் நிதித்துறை சட்டத்தரணிகள் இன்று தொடங்கியுள்ளனர்.
சமீபத்தில் அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்ட 'எப்ஸ்டீன் கோப்புகளில்' ஜெக் லாங்கின் பெயர் சுமார் 700 முறை இடம்பெற்றுள்ளது.
எப்ஸ்டீன் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின்னரும்
ஜெக் லாங் தனது குடும்பத் தேவைகளுக்காகவும், பயணங்களுக்காகவும் எப்ஸ்டீனின் தனிப்பட்ட விமானம் மற்றும் கார்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஜெக் லாங்கின் மகள் கரோலின், எப்ஸ்டீனுடன் இணைந்து அமெரிக்க விர்ஜின் தீவுகளில் 'Prytanee LLC' என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கியதாகக் கோப்புகள் தெரிவிக்கின்றன.
2008லேயே எப்ஸ்டீன் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின்னரும், ஜெக் லாங் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
தற்போது பாரிஸில் உள்ள Arab World Institute நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ஜெக் லாங், தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.
"எப்ஸ்டீன் ஒரு கலை ஆர்வலர் என்ற முறையிலேயே எனக்குத் தெரியும். அவரது குற்றப் பின்னணி பற்றி எனக்கு எதுவும் தெரியாது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார். புகழ்பெற்ற இயக்குனர் உட்டி ஆலன் (Woody Allen) மூலமே தனக்கு எப்ஸ்டீன் அறிமுகமானதாக அவர் தெரிவித்துள்ளார்.