அம்மாச்சி உணவகத்தில் ஊழியர்களுக்கு எதிராக நடக்கும் முறைகேடுகள்! கண்ணீருடன் பெண் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு இயங்கி வரும், அம்மாச்சி உணவகத்தில் சுழற்சி முறையில் வேலை வழங்கப்படாமை, மானிய விலைகளில் அமைச்சினால் வழங்கப்படும் உபகரணங்களை பயணாளிகளுக்கு வழங்காமை என பல்வேறு முறைகேடுகள் இடம் பெறுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாய திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தில் பாரிய ஊழல் மோசடிகள் மற்றும் உணவகத்தில் பணியாற்றிய பணியாளர்களை விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் அநாகரிகமாக நடந்து கொள்வதால், அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களை வேலையில் இருந்து இடைநிறுத்துவதாக குற்றச்சாட்டு
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் நேற்று(19.04.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி விடயங்களை தெரிவித்துள்ளனர்.
அதாவது, குறிப்பிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களை தலைமை தாங்கும் குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக குறித்த உணவகத்தின் பணியாற்றி வருகின்றனர்.
குறிப்பாக சுழற்சி முறையில் வேலைகள் வழங்கப்பட வேண்டிய நிலையிலும், குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே வருடக் கணக்கில் தொடர்ச்சியாக பணி வழங்கப்படுவதும் ஏனையவர்களுக்கு வேலைகள் வழங்கப்படாது, அவர்களை வெளியேற்றும் செயற்பாடுகளிலும் சில அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக ஏழு வருடங்களுக்கும் மேலாக குறிப்பிட்ட சிலர் இங்கு பணியாற்றி வருவதாகவும், பெண்களின் வாழ்வாதார தொழில் முயற்சிகளுக்கு என அரச மானியங்களின் கீழ் வழங்கப்படும் உபகரண தொகுதிகள் மற்றும் பொருட்களை சில இவ்வாறானவர்களை வைத்து விவசாய திணைக்கள ஊழியர்களே அவற்றை கொள்வனவு செய்து செல்வதாகவும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
நேர்முகத் தேர்வின் மூலம் தெரிவு செய்யப்பட்ட முகாமையாளர் உள்ளிட்ட அதிகளவான ஊழியர்களை கட்டாயப்படுத்தி பணியிலிருந்து நிக்கியும், பணிவிலகியும் சென்றுள்ளார்கள் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஜோதிலட்சுமி அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோதும் உரிய பதில் எதனையும் வழங்கவில்லை என்றும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஆறு மணிநேரமாக மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை! கடலின் நடுவில் அதிரடி காட்டிய அமெரிக்கா - வெளியான காணொளி
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 11 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan