இந்தியாவில் வசித்துவரும் கனேடிய மக்களுக்கு அந்நாட்டு அரசு மீண்டும் எச்சரிக்கை- செய்திகளின் தொகுப்பு
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா- கனடா நாடுகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளது.
ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்தியாவின் ஏஜெண்டுகள் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தினார். இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவத்தையொட்டி கனடாவில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரி ஒருவரை அந்நாடு வெளியேற்றியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அரசும் டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரியை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும்,இந்தியாவில் வசிக்கும் கனடா நாட்டினர் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கனடா அரசு சமூகவலைதளம் மூலம் அறிவுறுத்தி இருக்கிறது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,