மீண்டும் வரிசை யுகம்! நாட்டு மக்களை எச்சரிக்கும் ஜனாதிபதி
அரசாங்கத்தினால் ஆரம்பித்த வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்லாவிட்டால் நாடு மீண்டும் வரிசை யுகத்தை எதிர்நோக்க நேரிடுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வான்றில் கலந்துகொண்டு கருத்துத் தொிவித்த போதே அவா் இதனை குறிப்பிட்டுள்ளாா்.
இது தொடா்பில் அவா் மேலும் தொிவிக்கையில்,'' நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டும்.
பொருளாதார பரிமாற்றச் சட்டம்
இந்த ஒப்பந்தங்களை மாற்ற முயற்சிப்பதன் மூலம் நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய நிதியுதவியை இழக்க நேரிடும். சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தங்களை மாற்றினால் பாதகமான விளைவுகள் ஏற்படும்.

2035ஆம் ஆண்டுக்குள் நாட்டை, ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக மாற்றும் நோக்கிலேயே பொருளாதார பரிமாற்றச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மத்திய அரசாங்கத்தின் சுமையை குறைத்து மாகாணங்களுக்கு அபிவிருத்தியை பகிர்ந்தளிக்கும் வகையில் மாகாண சபைகளை பலப்படுத்துவதே எமது நோக்கமாகும்.” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam