மீண்டும் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
நாட்டில் உள்ள 72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை காலை 6 மணிமுதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை
இந்த விடயம் தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்றைய தினம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் தொடர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களினது கூட்டமைப்பின் இணைப்பாளர் சானக்க தர்மவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri

புடின் படை இந்த ஆண்டில் வெல்லும்... அதில் ஒளிந்திருக்கும் சிக்கல்: எச்சரிக்கும் குறி சொல்பவர் News Lankasri
