இலங்கையில் மீண்டும் மண்சரிவு - இரவு வேளையில் தப்பியோடிய மக்கள்
இலங்கையில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக மலையகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மலையகத்தில் அதிகளவான உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய மண்சரிவு காரணமாக மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் பதுளையில் நேற்றிரவு மீண்டும் மண்சரிவு ஏற்பட்டமையினால் அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பு தேடி தப்பிச் சென்றுள்ளனர்.
பாரிய மண்சரிவு
எகரிய, மீகொல்ல, மேல் பகுதியில் இன்று அதிகாலையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்தப் பகுதி மக்கள் அதிகாலை 4 மணியளவில், விளையாட்டு மைதானத்தில் ஒன்றுக் கூடியதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களை வெளியேற்றும் முயற்சிகள் இருந்தபோதிலும், பல குடும்பங்கள் அப்பகுதியில் தங்கியிருப்பதாகவும், பாதுகாப்பு மையங்களை அடைய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்ச்சரிவு ஏற்பட்ட போதிலும், அப்பகுதியில் இருந்து எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.


கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam