கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் ஏற்பட்டுள்ள ஆபத்தான மாற்றம்
காற்றின் தரம் தொடர்பில் இன்று மீண்டும் ஆபத்தான மாற்றம் கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
அந்த வகையில் கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் காற்றின் தரம் இன்று மீண்டும் குறைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன (NBRO) தரவுகள் தெரிவிக்கின்றன.
காற்றின் தரக் குறியீடு
இன்றைய நிலவரப்படி கொழும்பு மற்றும் கம்பஹா காற்றின் தரக் குறியீடு (AQI) 150க்கு மேல் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே குறித்த மாவட்டங்களில் வசிப்பவர்கள் உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடுமையான உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
என்ற போதும் கூட யாழ்ப்பாணம், புத்தளம், பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் வார இறுதியில் குறைந்த நிலையில் இருந்த காற்றின் தரம் தற்போது மேம்பட்டுள்ளதாக NBRO தெரிவித்துள்ளது.
காற்றின் தரம்
காற்றுடன் இந்தியாவில் இருந்து வெளியேறும் மாசுபட்ட காற்றின் விளைவாக இலங்கையில் பல இடங்களில் காற்றின் தரம் குறைந்திருந்தது.
இதனை தொடந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் காற்றின் தரம் மேம்பட்டிருந்த நிலையில் மீண்டும் சில இடங்களில் தற்போது குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.