முல்லைத்தீவில் நகை அடகு பிடிக்கும் நிலையங்களின் முன் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்
பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு மக்கள் தாம் சேமித்து வைத்த பணத்தினை மீள பெறுவதற்கும், நகை அடகு பிடிக்கும் நிலையங்களிலும் நீண்டவரிசையில் காத்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கோவிட் தொற்றால் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை காரணமாக, நாளாந்த தொழில்வாய்ப்பை பெற்று வாழ்ந்து வந்த மக்களின் வாழ்வாதாரம் அதிகளவு பாதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பயணத்தடை நீக்கப்பட்டமையினால் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான பணத் தேவையை நிவர்த்தி செய்து கொள்வதற்காக இவ்வாறு வங்களிலும் அடகு பிடிக்கும் நிலையங்களிலும் மக்கள் குவிந்திருந்ததாக தெரியவருகிறது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் வணிக நிலையங்கள், சந்தை வியாபாரிகளின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் மக்களின் நுகர்வில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
