தேர்தல் முடிந்த பின் பொது வேட்பாளரை ஆதரிக்கும் பொதுக்கட்டமைப்பினர் திருந்துவார்கள் : வினோ எம்.பி
பொது வேட்பாளரை ஆதரிக்கும் தமிழ் பொதுக் கட்டமைப்பினர் திருந்துவதற்கான ஒரு வாய்ப்பினை தேர்தல் முடிவுகள் நிச்சயம் உணர்த்தும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (28.08.2024) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தேர்தல் முடிவு
அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது, முன்னர் நான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. எனது கட்சியாகிய ரெலோ வேறு ஒரு முடிவு எடுத்திருக்கலாம்.
என்னை பொறுத்தவரை எடுத்த முடிவில் மாற்றம் இல்லை. பொதுவேட்பாளருக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்யப்போவதில்லை.
அவருக்கு ஆதரவில்லாத நிலைப்பாடுகள் அங்கத்துவ கட்சி உறுப்பினர்களிடத்திலும் உள்ளது. எமது கட்சி உறுப்பினர்களிடத்திலும் இருக்கிறது. கட்சி எடுத்த முடிவு சரியோ, தவறோ என்பதற்கு அப்பால் தனிப்பட்ட ரிதீயிலே இந்த முடிவோடு நான் இணங்கவில்லை.
மக்களால் விரும்பம்படுகின்ற மக்கள் தேர்தெடுத்த முடிவாக இதனை நான் கருதவில்லை.தேர்தல் முடிவுகளிற்கு பின்னர் இந்த பொதுக்கட்டமைப்பில் உள்ளவர்கள் திருந்துவதற்கான ஒரு வாய்ப்பை இந்த தேர்தல் நிச்சயமாக கொடுக்கும்.
மூன்று வேட்பாளர்கள்
குறிப்பாக தேர்தலில் நிற்கும் மூன்று வேட்பாளர்களின் பெயர்கள் மக்கள் மனங்களிலே இருக்கின்றது.
மக்கள் தீர்க்கமான சரியான முடிவை எடுப்பார்கள். பெரும்பான்மையான மக்கள் எடுத்த முடிவிற்கு ஆதரவாக நானும் செயற்படுவேன். இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும் பல தடைவைகளுக்கு மேல் சந்தித்திருக்கின்றேன்.
வன்னி மாவட்டத்தினுடைய அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கங்கள் சம்மந்தமாக அவருடன் கலந்துரையாடியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |