சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள மாற்றம்:விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மாண்டஸ் சூறாவளியால் நாட்டின் சில முக்கிய நகரங்களில் காற்று தரச்சுட்டெண் மோசமான நிலையை அடைந்துள்ளது.
இந்த காற்று மாசடைவு காரணமாக, சூழலுக்கும், பொதுமக்களின் வாழ்க்கைக்கும் பெரும் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக, கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் எம்.டீ.எம். மஹீஸ் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் முதல் முறை
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,நாட்டில் ஏற்பட்ட காற்று மாசடைவினால் நகரப்புற மக்களின் வாழ்வியல் முறைமைலும் நாளாந்த கூலித் தொழிலில் ஈடுபடுபவர்களின் வாழ்வியலிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக அதிகளவான காற்று மாசடைவை அவதானிக்க முடிகின்றது.
இதன் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களின் அன்றாட செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.”என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காற்று தரச்சுட்டெணில் ஏற்படும் மாற்றம் சுவாச கோளாறுகளை கொண்ட மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று தரச்சுட்டெண்ணில் நாளுக்கு நாள் மாற்றங்கள்
இதேவேளை நாட்டின் முக்கிய நகரங்களின் காற்று தரச்சுட்டெண்ணில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
இதற்கமைய 101 முதல் 150 வரையிலான காற்றுத் தரச்சுட்டெண், சுவாச கோளாறுகளை கொண்ட தரப்பினருக்கு ஆரோக்கியமற்றவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 151-200 முழுவதுமாக ஆரோக்கியமற்றது என்றும் இதனால் முககவசத்தை அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 18 மணி நேரம் முன்

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
