மக்களின் கஷ்டங்களை போக்கிய பின்னரே தேர்தல்-பாலித ரங்கே பண்டார
மக்களை கஷ்டங்களில் இருந்து மீட்ட பின்னரே நாட்டில் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி முன்வைத்துள்ள யோசனை

உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் சுமையை நாட்டு மக்களால் தாங்க முடியாது என்பதால், 8 ஆயிரமாக இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4 ஆயிரமாக குறைக்கும் யோசனை ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளார்.
அதற்கு அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளது என்பதால், துறைக்கு பொறுப்பான அமைச்சர் எல்லைகளை நிர்ணயம் செய்ய குழுவொன்றை நியமிக்க முடியும்.
இதற்காக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தற்போது அரசியல் செய்யும் தேவை இல்லை.
மக்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்துக்கொள்வதில்லை

இதனால், மக்கள் ஆர்ப்பாடங்களில் கலந்துக்கொள்வதில்லை. கூட்டங்களை ஏற்பாடு செய்வோருக்கு மக்கள் ஹூ சத்தம் போடுகின்றனர். வாழ்வது தொடர்பான பிரச்சினை தற்போது மக்களுக்கு இருக்கின்றது.
ஐக்கிய தேசியக்கட்சி தனியாக நாட்டை மீட்க முடியாது. நாங்கள் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயற்படுவோம்.
இதனால், அனைத்து கட்சிகளுடனும் இணைந்தே ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்கும். நாங்கள் தேர்தலை ஒத்திவைக்க மாட்டோம்.
எமக்கு சாதகமற்ற பல சந்தர்ப்பங்களில் நாங்கள் தேர்தலை நடத்தியுள்ளோம். மக்கள் படும் கஷ்டங்களில் இருந்து அவர்களை மீட்ட பின்னரே தேர்தலை நடத்த வேண்டும் எனவும் பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan