இலங்கையுடன் இருதரப்பு உறவை மேம்படுத்த தென்னாப்பிரிக்க ஜனாதிபதி முயற்சி!
தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா இலங்கையுடனான இருதரப்பு உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, இரு நாடுகளின் சுற்றுலாத் துறைகளிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவிற்கான இலங்கையின் புதிய உயர் ஸ்தானிகர் எஸ்.அமரசேகரவை சந்தித்தபோது சிரில் ரமபோசா இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
எஸ்.அமரசேகர தனது நியமன கடிதங்களை ஜனாதிபதி சிரில் ரமபோசாவிடம் பிரிட்டோரியாவில் உள்ள செஃபாகோ எம் மக்காத்தோ ஜனாதிபதி விருந்தினர் மாளிகையில் வைத்து வழங்கினார்.
கடுமையான COVID-19 சுகாதார நெறிமுறைகளுக்கு அமைய இந்த நிகழ்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
இலங்கை உயர் ஸ்தானிகரின் நியமன் கடிதங்களை ஏற்றுக்கொண்ட பின்னர், ஜனாதிபதி ராமபோசா இலங்கைக்கான தனது வருகைகளை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
அத்துடன், இரு நாடுகளின் சுற்றுலாத் துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தி இருதரப்பு உறவை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri