ஆண்கள் இன்றி பெண்கள் தனியே செல்ல தடை விதித்துள்ள நாடு (Video)
வீதி மார்க்கமாக நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்பும் ஆப்கானிஸ்தான் பெண்களுடன் ஆண் உறவினர்கள் உடன் சென்றால் மட்டுமே அவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்யப்படவேண்டும் என்று தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்டில், தாலிபான்கள், ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை கைப்பற்றியதிலிருந்து பெண்களின் உரிமைகள் மீது விதிக்கப்பட்ட அண்மைய தடை இதுவாகும்.
ஏற்கனவே பெண்களுக்கான பெரும்பாலான இடைநிலை பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன,
பெரும்பாலான பெண்களுக்கு வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் 72 கிலோ மீற்றர்களுக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் குடும்ப உறுப்பினருடன் செல்ல வேண்டும் என்று தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன் இதன்போது இஸ்லாமிய முறையில் தலை அல்லது முகத்தை மூடாத பெண்களுக்கு போக்குவரத்தை அனுமதிக்கவேண்டாம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் வாகனங்களில் இசையை இசைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



