ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் மோதல்: சீனாவில் அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பம்
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மிகக்கடுமையான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் சீனாவின் உரும்கி நகரில் தொடங்கியுள்ளன.
2021இல் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, இரு முஸ்லிம் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மிக மோசமான போர்ச் சூழலாக இது கருதப்படுகிறது.
கடந்த பெப்ரவரி மாதம் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இரு தரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், சீன அரசு இந்த விவகாரத்தில் சமரச முயற்சியை மேற்கொண்டுள்ளது.
பாகிஸ்தானில் தாக்குதல்
குறிப்பாக, போரை நிறுத்துவது (Ceasefire) மற்றும் வர்த்தகத்திற்காக இரு நாட்டு எல்லைகளை மீண்டும் திறப்பது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்குத் தாலிபான்கள் புகலிடம் அளிப்பதாக இஸ்லாமாபாத் குற்றம் சாட்டுகிறது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் காபூல் நிர்வாகம், இது பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினை என்று கூறி வருகிறது.
முன்னதாக, கடந்த மாதம் காபூலில் உள்ள ஒரு போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தின் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதற்கிடையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் பெய்ஜிங்கிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகப் பிரதிநிதிகள் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக கத்தார், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இந்த மோதலில் சமரசம் செய்ய முயன்றன. ஆனால், தற்போது அந்த நாடுகள் அமெரிக்கா - ஈரான் போர் விவகாரங்களில் சிக்கியுள்ளதால், சீனா இந்த முயற்சியைத் முன்னெடுத்துள்ளது.

ரமழான் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தம் கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்த நிலையில், மீண்டும் எல்லைப் பகுதிகளில் துப்பாக்கிச் சூடு அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலில், சீனாவின் இந்தத் தலையீடு இரு நாடுகளுக்கும் இடையே ஒரு நிலையான அமைதியை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam