ஆப்கானிஸ்தானில் கடும் குளிர்: 124 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் கடந்த 2 வாரங்களாக நிலவி வரும் கடும் குளிர் காரணமாக இதுவரை 124 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுமார் 70,000 கால்நடைகளும் இறந்துள்ளதாக பேரிடர் மேலாண்மைக்கான மாநில அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேரிடர் மேலாண்மையின் செயல் அமைச்சர் முல்லா முகமது அப்பாஸ் கூறுகையில்,
பல பகுதிகள் பனியால் பாதிப்பு
ஆப்கானிஸ்தானின் பல பகுதிகள் இப்போது பனியால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
குளிரால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள். அவர்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கவில்லை.
இராணுவ ஹெலிகொப்டர்கள் மீட்புக்கு அனுப்பப்பட்டன, ஆனால் அவை மலைப்பகுதிகளில் தரையிறங்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
அத்துடன், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்றுவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளக் கூடிய பல தொண்டு நிறுவனங்கள் தங்களது நடவடிக்கைகளை நிறுத்திவைத்துள்ளன.
இதுவும் கடும் குளிருக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.
இருந்தாலும், தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்று தலிபான்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 22 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
