ஆறாத வடுக்களை ஏற்படுத்திய சுனாமி பேரவலம் !17 வருடங்கள் கடந்தும் தொடரும் பாச போராட்டம்
துயரம், தொழில்நுட்பம் ஒன்றிணைந்திருந்தல் ஆகியனவே 2004 சுனாமிக்கு பின்னர் கடந்த 17 வருடங்களில் சுனாமியிலிருந்து தப்பியவர்கள் அனுபவித்த விடயமாகும்.
சுனாமி பேரலையினால் காணாமல் போன தனது சகோதரி ஹிருணியை தேடிக்கொண்டிருப்பதாகவும், சகோதரியை இழந்த தனக்கு தொழில்நுட்பம் மாத்திரமே ஆறுதலாக உள்ளது என நடுனி ஹன்சானா தனது துயரத்தினை துகப்புத்தகம் வாயிலாக பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
அவரின் முகப்புத்தக பதிவு பின்வருமாறு,
தலைவிதி மாறிய அந்த நாளில் நாங்கள் ஹிக்கடுவையை நோக்கி சென்றுகொண்டிருந்தோம்.டெல்வத்தை பெரலியவில் சுனாமி அலைகள் எங்களை கொண்டு சென்றன.ஹிருணியின் தோற்றத்தை ஒத்த சிறுமிக்கு தான் உதவியதாக முதியவர் ஒருவர் தெரிவித்தார்.
பெற்றோர் முழுக்கிராமத்திலும் தேடினார்கள்,சகோதரியை தேடி விளம்பரங்களை வெளியிட்டார்கள்,சுவரொட்டிகளை கூட வெளியிட்டார்கள்,
நாங்கள் சோதிடர்களிடம் குறிசொல்பவர்களிடம் சென்றோம்.அவர்கள் எனது சகோதாரி உயிருடன் இருக்கின்றார் என நம்புகின்றனர்.
நான் தற்போது சமூக ஊடகங்களை பயன்படுத்தி சகோதரியை தேடுகின்றேன்.கிருளப்பனையை சேர்ந்த நடுனி. அவ்வேளை அவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வித்தியாலத்தில் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்.அவரது முதல் புகையிரதப்பயணம் என்பதால் அவர் அச்சமடைந்திருந்தார்.
அந்த சம்பவத்தின் பின்னர் அவர் அதிர்ச்சியடைந்தாரா தனது சுயநினைவை இழந்தாரா என நாங்கள் தற்போதும் சிந்திக்கின்றோம்.இந்த வருடம் அவருக்கு 24 வயது.அவர் இலங்கையில் இருந்தாலும் வெளிநாட்டிலிருந்தாலும் நிச்சயம் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தும் நிலையில் நிச்சயம் இருப்பார்.அவரை யாராவது தத்து எடுத்திருந்தால் அவர்களை நாங்கள் மன்னிப்பதற்கு தயாராகயிருக்கின்றோம்.
அவர் உயிருடன் இருக்கின்றார் என்பதை அறிவதும் அவருடன் பேசுவதுமே எங்கள் விருப்பம்.நீங்கள் இதுபோன்றதொரு கதையை கேட்டிருந்தால் தயவு செய்து நாங்கள் அவரை பிரிந்து வாடுகின்றோம் என்பதை தெரிவியுங்கள்.
நாங்கள் அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த விரும்பவில்லை.அவரது புதிய வாழ்வை குழப்ப விரும்பவில்லை, அவர் எப்படியிருக்கின்றார் என பார்த்தால் போதும் என நடுனி தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.
இன்னமும்; போதியளவு தகவல் கிடைக்கவில்லை.ஆனால் பலர் கருணையுடன் செயற்படுகின்றனர்.உண்மையாக எங்களிற்கு உதவ முயல்கின்றனர். சுனாமியால் தங்கள் குடும்பத்தவர்களை இழந்தவர்கள் அல்லது தொலைத்தவர்கள் சந்திப்பதற்கான பொதுவான தளத்தை அதிகாரிகள் உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
